அனைத்து ஆண்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

அனைத்து ஆண்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

1] உங்களுக்கே உங்களுகாக.

• மாதம் ₹5000 சம்பாதித்தாலும், ₹5,00,000 சம்பாதித்தாலும், பத்து பேருக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியாகவே இருந்தாலும்; செலவு செய்தது போக மீதமுள்ள(!!!) சேமிப்பெல்லாம் என்னுடையது தானே என்று நினைத்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

• அந்த சேமிப்பும் உங்களை சார்ந்தவர்களுக்காக செலவு செய்யவே சேமித்தது என்பதை உணரும் காலத்தே அவையனைத்தும் கரைந்து போயிருக்கும்.

• 60 வயதில் பழனிக்குச் சென்று ஆசையாய் ஒரு மொட்டை போடலாம் (உங்களுக்கே தான்:)) என்று நினைத்தால் கூட முதலில் பட்ஜெட் போட நிர்பந்திக்கப் படுவீர்கள். ஆகவே சம்பாதிக்க ஆரம்பிக்கும் காலத்தில் இருந்தே உங்களுக்கென 1% எடுத்து வையுங்கள். மொட்டை போட அல்ல, ஆகாமல் இருக்க.

• PF, பென்ஷன் என்று இருந்தாலும் சம்பாதிக்கும் பொழுதே உங்களுக்காக நீங்களே சேமிக்க ஆர்வம் கொள்ளாவிடில், பிறர் வலுக்கட்டாயமாக சேமித்து கொடுத்ததை கொண்டு என்ன செய்வீர்கள்??? சர்வமும் குடும்பத்திற்கே!

• லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைலை விட, உறுதியான உடலை விட, நேர்த்தியான ஆடையை விட, கச்சிதமான ஷூவை விட… ஒரு ஆணுக்கு தன்னம்பிக்கையை கொடுப்பது ஏழு/எட்டு இலக்க சேமிப்பு தான்.

• Pay yourself first.

2] பெண்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்யாதீர்கள்.

ஜுன்ஸ் பேண்ட் போட்டாக்கா
பேஃகி பேண்டையே பார்ப்பாங்க
பேஃகி பேண்ட் போட்டாக்கா
வேட்டியத்தான் தேடுவாங்க.

• அவர்களுக்காக மாற்றிக் கொண்டே இருந்தால் சிக்குபுக்கு ரயிலே ஜிக்கும். எப்பொழுதும் உசிலம்பட்டி பெண்குட்டிகள் உஷாராகத்தான் இருப்பார்கள்.

• காலத்தால் கம்சன் வேஷம் போட நேர்ந்தாலும் குந்தவைக்கு செயல்வீரனை அடையாளம் தெரியும்..

3] மன அழுத்தத்தை கையாள கற்றுக் கொள்ளுங்கள்.

• கடினமான காலங்கலெல்லாமே அற்ப மாயைகள்.

• “இதுவும் கடந்து போகும்”/”எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது” என்பதை கடைப்பிடிக்க உறுதி கொள்ளுங்கள்.

4] சொல்வன்மை.

• ஆணோ, பெண்ணோ யாராயினும் சுருக்கமாக பேசி, நடையை கட்டுங்கள்.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

• உண்மையான எல்லாத்தையுமே பேசாவிட்டாலும், பேசுவது எல்லாமுமே உண்மையாக இருக்கட்டும்.

• நாணயம், நா நயம் இரண்டும் அவசியம்.

5] விட்டு விடுதலையாகி நிற்பாய்.

• யாருக்கும் அடிமையாக இருக்காதீர்கள். அன்புக்கு அடிமை, பண்புக்கு அடிமை என்று ஒவ்வொன்றாக பட்டியலில் சேர்த்துக் கொண்டே போக வேண்டாம்.

• எது உங்களை இழுத்து செல்கிறதோ, மூழ்கடிக்கும் முன்பே விழித்துக் கொண்டு வெளியேறி விடுங்கள்.

• சமூக இடைவெளி, பேச்சிலும் இருக்கட்டும்.

• 15 வயதில் பெற்ற தாயிடமிருந்தே தள்ளி நின்று பழகிவிட்டால், எப்பெண்ணிடமும் விழுந்து வார மாட்டீர்கள். எந்த வழி சென்றாலும் வந்தவழி மறக்க மாட்டீர்கள்.

6] சித்திரம் வரைய…

• அப்பாவிற்கு எந்த வயதில், என்ன நோய்? தாத்தாவிற்கு எப்படி? என்றெல்லாம் கேட்டு தெளிந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு முறையில் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பாக உடற்பயிற்சி மூலம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

• பெண்கள் சுயசம்பாத்யம், நிர்வாக திறமை பெற்றிருந்தாலும், ஏன் சமயத்தில் உங்களுக்கே ஐடியா கொடுத்தாலும், குடும்பம் என்று வந்துவிட்டால் தலைவனுக்கு நிகர் யார்?…

Read Previous

பிரபல திரைப்பட நாட்டுப்புற பாடகியின் பரிதாப நிலை..!! உதவி செய்யக் கோரி வேண்டுகோள்..!!

Read Next

நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவையில்லை..!! நல்ல வாழ்க்கைத் துணை இருந்தாலே போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular