✅நல்ல பழக்கங்கள்…
🍁நகத்தை பற்களால் கடிக்க கூடாது.
🍁மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.
🍁தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.
🍁துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.*
🍁நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.
🍁செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை.
🍁அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.
🍁ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது.
🍁தண்ணீரிலும், எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.
🍁இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்.
🍁உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.
🍁ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.
🍁நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.
🍁உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.
🍁கன்றுக்குட்டி,மாடு ஆகியவை கட்டியிருக்கும்கயிற்றை தாண்டக்கூடாது.
🍁பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.
🍁தன்தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது.
🍁தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியா் பிணத்தை சுமந்து செல்லக்கூடாது. ஆனால் தன்தாய், தந்தை, பிள்ளையில்லாத சகோதரன், பிள்ளையில்லாத மாமன் ஆகியோாின் பிணத்தை சுமக்கலாம்.
🍁தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.
🍁மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்.




