Oplus_131072
படித்ததில் பிடித்தது
• இந்த உலகம், நீ எப்போது கீழே விழுவாய் என்று பார்த்துக்கொண்டு இருக்கும். நீ ஏறுவதை எல்லாம் ரசிக்காது.
• பணம் இருந்தால் தான் நீ உறவினர். இல்லை என்றால் உறவு – இல்லார். அனாதை தான்.
• வாழ்க்கையில் எந்த ஒரு உயர்வுக்கு நீ போனாலும் உன்னை மட்டம் தட்ட கீழ் இருக்கும் நபர்கள் குறைத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.
• பணத்திற்கு சாதி மதம் எல்லாம் இல்லை. பணம் இல்லையேல் சாதி மதம் எல்லாம் பார்க்கப்படும்.
• நீ ஒரு வேலையில் இருக்கும் போது வேலை இல்லாத நண்பன் போன் செய்தால் ஒரு தடவை நீ யோசிக்கதான் செய்வாய்.
• கடைசி வரை உன்கூட இருக்கப்போகும் உறவு நீ மட்டுமே. உன் மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்தப்போவது உன் பெற்றோர் மட்டுமே.
• நாம் முன்னேறுவதை பார்த்து பொறாமை படும் கூட்டமே இங்கு ஜாஸ்தி. அந்த பொறாமை அவர்களை என்னென்னமோ வேலைகள் செய்ய தூண்டும்.
• பல நேரங்களில் நம் முதுகில் குத்துவது நாம் நேசிக்கும் உறவுகளே. இது புரிய நாள் ஆகும்.
• நாம் இருக்கும் போதும், இறக்கும் போதும் நம் பின்னால் பேசுபவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கப்போகிறார்கள்.
• இங்கு பாதி பேர் கடவுளை தரிசிப்பதற்கு காரணமே, அவர்களின் புலம்பலை கேட்க ஆள் இல்லாத காரணங்கள் தான்…..




