அன்னதானத்தின் மகிமை..!! தகுதியானவர்களுக்கு செய்யும் அன்னதானம் உங்கள் புண்ணிய கணக்கை உயர்த்தும்..!!

Oplus_131072

அன்னதானத்தின் மகிமை

ஒரு திருடனுக்கு, ஒரு முறை வருமானம் ஏதும் கிடைக்கவில்லை. பசியால் துடித்துக் கொண்டிருந்தான்.

கால் போன போக்கில் நடந்தான். ஒரு மரத்தடியில் வியாபாரி ஒருவர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அவர் அருகில் ஒரு பொட்டலம் இருந்தது.

திருடன் மகிழ்ந்தான். அதை கையில் எடுத்தான். பொன்னும் பொருளும் இருக்கும் என பிரித்துப் பார்த்தான். அதில் ருசியான சாப்பாடு இருந்தது. பசியில் அதை சாப்பிட்டான்.

உணவை பறிகொடுத்த வியாபாரி நல்லவர் அல்ல. கொள்ளை லாபம் அடிப்பவர். ஒருநாள் அவர் இறந்து போனார். எமலோகத்தில் அவரது பாவ புண்ணிய கணக்கு வாசிக்கப்பட்டது.

சோற்று பொட்டலத்தை திருடனுக்கு தன்னை அறியாமல் கொடுத்த புண்ணியத்திற்காக பாவியான அவர் சிறிது காலம் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார்.

அன்னதானத்தின் மகிமையை பார்த்தீர்களா! சோம்பேறியான திருடனுக்கு சோறு கொடுத்ததற்கே, இவ்வளவு புண்ணியம் என்றால் தக்கவர்களுக்கு கொடுத்தால் எவ்வளவோ புண்ணியம் கிடைக்குமே!

தகுதியானவர்களுக்கு செய்யும் அன்னதானம் உங்கள் புண்ணிய கணக்கை உயர்த்தும்.

Read Previous

கடவுள் உயர்வானவரா..?? குருவே உயர்வானவரா..?? என்பதை பக்தர்களுக்கு விளக்கும் ஒரு அருமையான ஆன்மிக கதை..!!

Read Next

மிருகங்களிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular