Oplus_131072
அன்பு மகனுக்கு அம்மாவின் கடிதம்
வசதியாகத்தான் இருக்கிறது மகனே
கொண்டு வந்து சேர்ந்த முதியோர் இல்லம்
பொறுப்பாய் ஒப்படைத்து விட்டு
வெளியேறிய போது
முன்பு நானும் இது போல்
உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
நான் கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது
முதல் தரமிக்க இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி எதுவென்றே
ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்
இது வரையில் ஒரு முறையேனும்
என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை
நீ மறக்காமல் அனுப்பி
வைப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன்
நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைந்து
உன்னை சந்திக்க மறுத்தேன்
எதிர் வினையே இது
இப்போது அறிகிறேன்
இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக
சேமித்த அனுபவத்தை
என் முதுமைப்பருவத்தில்
மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய்
ஆயினும்
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறு பாடு தான்
நான் கற்றுக் கொடுத்தேன்
உனக்கு வாழ்ககை இது தான் என
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு
உறவுகள் இதுதானென்று
தாய் தந்தை மீது பாசம் வையுங்கள்
ஒவ்வொருவருக்குமான பதிவு இது.




