Oplus_131072
அப்பாக்கள் ஏன் தங்களுக்கு செலவு செய்து கொள்வதற்கு இவ்வளவு யோசிக்கிறார்கள்..?’
ஒரு விவாதம்.
ஒரு அம்மா, ‘பிஞ்ஜ செருப்ப கூட மாத்த மாட்டாருங்க..!’ என்று தன் கணவனைக் காட்டிச் சொல்ல, வெள்ளந்தியாய் அந்த அப்பா சொன்னார்: “குழந்தைக்கு, மனைவிக்கு ‘காஸ்ட்லியா’ வாங்கிக் குடுப்பேங்க.. ஆனா எனக்கு வாங்கிக்க மாட்டேன்..! அது ஏன்னு சொல்ல முடியில… எனக்கு வாங்குறதுல ஒரு ‘சந்தோஷம்’ இல்ல..!”.
கண்ணில் நீர் திரையிட, அவரைப் பார்த்துக் கொண்டிருந்த என்னால் அவரோடு identify பண்ணி, அவர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிந்தது..!
இந்த குணம் இப்போது 50 வயதைத் தாண்டிய பல அப்பாக்களிடம் ஏன் இருக்கிறது தெரியுமா..?
1940-50 களில் உலகப் போரின் பின்னணியில், இங்கே கொடிய பஞ்சம்…! Black மார்க்கெட்டில் ஏகப்பட்ட விலை..! மத்திமவர்க்கத்தினரில், யாரெல்லாம் பணத்தை சேமித்து வைத்திருந்தார்களோ அவர்கள் பிழைத்தார்கள்..! சேமிப்பு செய்யாதவர்கள் சொல்லொணா துயரத்தில் வாடினர்..!
இந்த அனுபவத்தினால், நம் பெற்றோர்கள், சேமிப்பு என்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தனர்..! அவர்களின் சோக அனுபவம் அவர்களை ரொம்ப cautiousஸாக, சிக்கனமாக, அனாவசிய செலவு எதுவுமே செய்யாமல் வாழ வைத்தது..!
நம் பெற்றோரை அப்படி பார்த்து வளர்ந்து விட்டதால்தான் , நம்மால், i.e., இப்போது 50+ வயதான தந்தைகளால், இப்போது தேவையான வசதி இருந்தாலும், ஒரு பொருளை வாங்கும் போது, அதன் நிஜ தேவை, அதன் worth, அதன் தரம்/விலை என்பதையெல்லாம் தீர யோசிக்காமல் வாங்க முடிவதில்லை..! ‘எதற்கு பணம் செலவழிக்க வேண்டும் என்றாலும் ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும்’ என்ற சித்தாந்த்த்தில் நாம் வளர்ந்து விட்டோம்..!
Mallகளிள் இருக்கும் கடைகளில், 200 ரூபாய் கூட வொர்த் இல்லாத பொருடகள், துணிகளை, 2000, 3000க்கு வாங்குவதில் நமக்கு மிகுந்த தயக்கம் வருவதற்கும் இந்த psychologyதான் காரணம்…!
‘சிந்திப்பது’ நம் உடை போல என்று நாம் நினைப்பதால்தான், இந்தக் கடைகளில் விற்கும் விலைகளைப் பார்க்கும் போது, நமக்கு நம் உடையைக் கழட்டி நம்மை நிர்வாணமாக்குவது போல பெரும் எரிச்சல் எழுகிறது..! நம் மூளையை நாமே எப்படி கழட்டி வைப்பது..? தெரிந்தே எப்படி ஏமாறுவது..? இதுதான் அப்பாக்களின் மனக்குமுறல், எரிச்சல், செலவு செய்யத் தயக்கம்..!
எனில், குழந்தைகளுக்காக மட்டும் எப்படி செல்வு செய்ய மனம் வருகிறது..? குழந்தைகளின் சந்தோஷத்திற்காக அப்பாக்கள் தங்களைத் தாங்களே நிர்வாணமாக்கிக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை..! ஆனால், தமக்காக செலவு செய்யம் போது அவர்களால் தம் மனத்தடையை மீறிச் செய்ய முடியவில்லை. அந்த டிபிக்கல் அப்பா சொன்னது இதுதான்..!
தேவையான வசதி இப்போது வந்து விட்ட நிலையில், இந்த mentalblockஸ் அவ்வளவு தேவையில்லைதான். ஆனால், சிறுவயதிலிருந்து மனதில் விதைக்கப்ட்ட சிக்கன உணர்வு, அப்பாவின் மனதிற்குள் ஒரு எச்சரிக்கை மணி போல் விடாமல் அடித்துக்கொண்டே இரூக்கிறதே பாவம், என்ன செய்வார்..?
அம்மாக்களும், பிள்ளைகளும் அப்பாக்களைப் புரிந்து கொள்ள வேண்டும்




