அப்பாவின் வருகைக்காக காத்திருக்கும் மகள் எழுதிய கடிதம்..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_131072

அன்புள்ள அப்பா உன் வருகைக்காக காத்திருக்கும் இந்த செல்ல மகள்..

நான் எத்தனை கடிதம் போடுகிறேன்
உங்களிடமிருந்து ஒரு கடிதம் கூட எனக்கு வரவில்லையே, கடிதம் எழுதுவதற்கு கூட வா நேரமில்லை?? அப்படி என்னதான் வேலை செய்கிறீர்கள்? அங்கே??
கடிதம் எழுத நேரம் இல்லை என்றால் நீங்கள் ஊருக்கு வந்து விடுங்கள் நான் பெரியளாகி உழைத்து உங்களுக்கு சாப்பாடு போடுகிறேன்…

அம்மாவிடம் கேட்டபோதெல்லாம்
அப்பா வருவார் வருவார் என்று
சொல்கிறார்கள்.. அம்மாக்கு வேண்டுமானால் உங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்கலாம்…
எனக்கு உங்களை பார்க்க வேண்டும்
உங்களுடைய மீசையை பிடிக்க வேண்டும்,, உங்கள கட்டிப்பிடித்து தூங்க வேண்டும்,உங்க கூட வண்டியில் போக வேண்டும், உங்க கூட குளிக்க வேண்டும்
உங்க கூட சாப்பிட வேண்டும்
என்ற ஆசைகள் எனக்கு இருக்காதா????
என்ன.

இந்த கடிதத்தை பார்த்ததும் நீங்கள் உடனே ஊருக்கு கிளம்பி வாருங்கள் நீங்க வரவில்லை என்றால் இனிமேல் என் கூட நீங்க பேசவே,. கூடாது.,….

அம்மா அப்பாவுக்கு கடிதம் எழுதி போட்டு இருக்கிறேன் அப்பா ஊருக்கு வரவில்லை என்றால் இனிமேல் நான் அவர்களிடம் பேச மாட்டேன்…..

கணவர் வேலைக்கு போன இடத்தில் பெரிய நிலநடுக்கம் வந்து அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து விட்டார்கள் என்று செய்தி அறிந்தேன்..
என் கணவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லை என இதுவரைக்கும் எனக்கும் தெரியவில்லை நானும் நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இதை என் மகளுக்கு எப்படி புரிய வைப்பது என்று எனக்கு தெரியவில்லை..

அம்மா போஸ்ட்…

இதோ வருகிறேன்
மகளே அப்பா உனக்கு கடிதம் போட்டு இருக்கார் இந்த
படி என்று தாய் கொடுக்க

அன்புள்ள மகளே உன் மீது எனக்கு அளவற்ற பாசம் இருக்கிறது, அப்பாவுக்கு உன்னுடைய கடிதத்தை படித்தேன் திரும்பி கடிதம் எழுதும் போது என் கண்களில் கண்ணீர் வடிந்து அந்த எழுத்துக்கள் எல்லாம் அழித்துவிட்டது…. அதனால உனக்கு கடிதம் போட முடியவில்லை.

இப்போது கூட நான் எழுதவில்லை ஒரு மாமாவிடம் சொல்லி எழுதுகின்றேன். ஏனென்றால் நான் எழுதும் போது கண்ணீர் வடிந்து திரும்பவும் அழிந்து விட்டால் நீ கஷ்டப்படுவாயல்லவா???

கண்டிப்பாக அப்பா திரும்ப ஊருக்கு வருவேன் நீ சந்தோஷமாக இருக்கணும் ஓகேவா??

“”தான் எழுதிய கடிதத்தை மகள் படிக்கும் போது #அம்மாவின் கண்களில் கண்ணீர் வருகிறது..

மகளே இப்போது உனக்கு சந்தோஷமா?? உன்னுடைய அப்பா கடிதம் போட்டிருக்கிறார்.. சந்தோசம் அம்மா..

அன்புள்ள அப்பா உங்களுடைய கடிதத்தை நீ படித்தேன் நான் சந்தோஷமா
இருக்கிறேன் நீங்களும் சந்தோஷமாக இருங்கள் கடிதம் எழுதய அங்கிளுக்கு நன்றி சொல்லி விடுங்கள் உங்கள் வருகைக்காக இந்த செல்ல மகள் காத்திருக்கிறேன்
ஐ லவ் யூ அப்பா.

Read Previous

பழகிடுச்சு – வாழ்க்கையின் கசப்பான பாடம் கட்டாயம் படிங்க..!!

Read Next

அம்மன் கோவில்களில் சூலத்தில் எலுமிச்சை சொருகி வழிபடுவது ஏன்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular