தனக்கான எந்த சந்தோஷங்களையும் அதிகமாக விரும்பாமல் தனது குடும்பம் குழந்தைகள் என ஓடிக்கொண்டேயிருக்கும் ஜீவன் தான் “அப்பா”. அப்பா பல செயல்களை தனக்குள்ளே வைத்துக்கொண்டு அவற்றை மூடி மறைத்துவிடுவார். காரணம் என்னவென்றால் அவற்றை தெரிந்துகொண்டால் தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படும் என்பதால் தான். அதனை பற்றி அருமையான கவிதை வரிகள் ஒன்றை பகிர்ந்துள்ளேன். இதோ அந்த வரிகள்:
“அப்பா”..
தன் பிள்ளைகளிடத்தில்
மூடி மறைப்பதில் மன்னன்
தன் மன வேதனையை
தன் சோதனையை
தன் பற்றாக்குறையை
தன் கண்ணீரை
தன் உறக்கமில்லாத இரவை
தன் வலிமைக்கு மீறிய உழைப்பை
தன் பிள்ளைப் பாசத்தை
அப்பா மூடி மறைப்பதில்
ஒரு மா மன்னன்..




