Oplus_131072
ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது
*துணி காயப்போடு,*
*பீரோவை அடுக்கி வை..*
*மதியானத்தில் தூங்காதே..*
*எப்ப பாரு என்ன டிவி?*
*புக் எடுத்து படி…*
*வீட்டு வேலை செய்*,
கல்யாணம் பண்ணி போற இடத்துல என்ன நினைப்பாங்க, சரியா வளர்க்கலேன்னு என்னை திட்ட மாட்டாங்களா” என்று
ஓயாத குடைச்சல், எப்பவுமே திட்டு, எப்பவுமே ஒரு அட்வைஸ், எதுக்கெடுத்தாலும் ஒரு பிளாஷ்பேக்,
அம்மா எப்பவுமே இப்படித்தானோ என்ற நினைப்பு இளம்வயதில் வந்தபடியே இருந்தது.
நான் பிரசவ வார்டில் இருந்தபோது, *அம்மா* என்று எத்தனை முறை கூப்பிட்டிருப்பேன் என்றே தெரியாது, குழந்தையை பெற்று கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் அவர் ஒரு நிமிடம் சும்மா இல்லையே..
இதை சாப்பிடு
அதை சாப்பிடாதே
இதை குடி
இப்படி திரும்பு
அப்படி படு,
குழந்தையை இப்படி பிடிச்சு தூக்கு
என்று சொல்லி கொண்டே இருந்தார். அவ்வளவு காலம் இல்லாமல், அம்மாவின் வயிற்றில் தழும்புகள், வடுக்களை அப்போதுதான் பார்த்தேன்.. பிரசவ போரில் நான் தந்த பரிசு போலும்.. நடுமண்டையில் சுரீரென்று எனக்கு உரைத்தது..
அம்மா எப்பவும் போலவேதான் இருக்கிறார்.. நான்தான் ஒவ்வொன்றிற்கும் எரிச்சல், குடைச்சல், என டிசைன் டிசைனாக பெயர் வைத்து கொண்டு இருந்திருக்கிறேன் என்று!!
“இவ்ளோ பெரிய பெண்ணாகியும் இன்னும் ரிப்பன் வைத்து சடை பின்னிக்க தெரியலயா, என்ற அம்மா திட்டிய அதே வார்த்தைகளை இன்று என் மகளிடம் என்னையும் அறியாமல் சொல்வது வியப்பாக உள்ளது! எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என் அம்மா!!
ஏனோ தெரியவில்லை.. என்னை பார்க்கும்போதெல்லாம் ஓயாமல் சொல்லும் பொய்
*ஏன் இப்படி இளைச்சிட்டே, ஏன் இப்படி கறுத்து போயிட்டே* என்பதுதான்..
*தட்டில் சட்னி மீதமிருக்குது பாரு, அதுக்காக இன்னும் ஒரே ஒரு தோசை*
என்று சாக்கு சொல்லி சுடச்சுட சுட்டுப்போடும் அலாதியே இன்றும் தனி அழகுதான்.. சாப்பிட்டு முடித்த பிறகு தான் தெரியும் சட்னியை முன்கூட்டியே தட்டில் அதிகமாக ஏன் வைத்தார் என்று?
அந்த அன்பின் சூட்சுமம்கூட தெரியாமல் நான் இருந்திருக்கிறேன்.
எத்தனை விஷயத்தில்தான் நான் இப்படி தோற்று கொண்டே இருப்பேனோ தெரியாது.. இந்த தொடர் தோல்வி எனக்கு பிடித்திருக்கிறது.. காரணம், என் அம்மா சளைக்காமல் வெற்றி பெற்று கொண்டே இருப்பதால்!!!
*உலகின் தலை சிறந்த முதல் தியாகி அம்மா மட்டுமே*சொக்கி போகும் முதல் உலக அழகிகளும் இவர்களே!!
உலகின் மிக பெரிய பொருளாதார மேதையுமே அம்மா மட்டுமே!!
*எத்தனை இடர்பாடுகள்*,
*எத்தனை துயரங்கள்,*
*எத்தனை வலிகள்*
வந்தால் என்ன?
உலக உருண்டையில் கலந்துவிட்ட இந்த தாய்மையானது அனைத்தையும் புரட்டி போட்டு கொண்டு மேலே சென்று கொண்டே இருக்கும்!!
இந்த பதிவு எல்லா அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்..




