அம்மா வேண்டுமா அல்லது பொண்டாட்டி வேண்டுமா என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
அம்மா வேண்டுமா ? பெண்டாட்டி வேண்டுமா?
எனது சித்தாந்தத்தை கேளுங்கள்
ஒரு வேளை என் மாமியார் என்னிடம் கேட்கிறார் என்று வைத்து கொள்வோம்.
பொண்டாட்டி அம்மா வாக வேண்டும் …அதன் பிறகு அவளிடமே கேளுங்கள் என்றிருப்பேன்.
இரு பொருள் படும் கொஞ்சம் யோசிச்சு தெரிஞ்சுக்கோங்க.
ஆனால், இன்றைய சமூகத்தில் அது கேட்பவருக்கு ஏற்றால்போல், நேரத்திற்கு ஏற்றார்போல் பதில் மாறும்.
பகலில் கேட்டால், பையன் சொல்வான், தொட்டில் ஆட்டி சோறு ஊட்டிய நீ தான் அம்மா எனக்கு முக்கியம் என்று!
அதே, இரவில் பொண்டாட்டி கேட்டால், தொட்டு #தாலிகட்டின பொண்டாட்டி நீ தான் எனக்கு முக்கியம் என்பான்.
இது, மனிதன் இயல்பு தான்.மன்னித்து விடலாம்!
ஆனால், என்னை பொறுத்தவரை உண்மை என்னா..
வாழும் காலத்தில் அம்மா இல்லாமல் வாழ்வது சாபம்!
வாழ்ந்து முடிக்கும் காலத்தில் #மனைவி இல்லாமல் வாழ்வது நரகம்!
அம்மாவின் மேல் அதீத பாசம் வைத்தி்ருப்பவருக்கும் , மனைவியை உயிராக நேசிப்பவருக்கும் நன்றாக புரியும் என்று நம்புகின்றேன்.
கணவன் இல்லாமல் பிள்ளைகளை வளர்ப்பதில் அம்மா தைரியசாலி..
அம்மா இல்லாத பிள்ளைகளை கணவன் வளர்ப்பதில் அவன் கோழையாக மாறுகிறான்…




