தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் சூர்யா போட்டியிடப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து சூர்யா நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும் அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.




