Oplus_131072
ஓட்ஸ் பாயசம் செய்வது எப்படி…
தேவையான பொருட்கள்.:
ஓட்ஸ் – அரை கப்,
பால் – ஒரு லிட்டர்,
சர்க்கரை – ஒரு கப்,
நெய்யில் வறுத்த முந்திரி,
திராட்சை – தேவைக்கேற்ப,
வெனிலா எசன்ஸ் – 2 சொட்டு.
செய்முறை.:
அரை லிட்டர் பாலுடன் ஓட்ஸ் சேர்த்து வேகவிட்டு, எடுத்து வைக்கவும்.
மீதி அரை லிட்டர் பாலில் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும். பால் குறுகிவரும்போது, வேக வைத்த ஓட்ஸ், முந்திரி, திராட்சை சேர்க்கவும். பிறகு, எசன்ஸ் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
ஓட்ஸை வேக வைத்து ஆறவிட்டு, பின்னர் சேர்ப்பதால், பாயசம் இறுகாமல் சிறிது தளர இருக்கும்.




