அரசு அலுவலகத்தில் கணவன் – மனைவியாக குத்தாட்டம் போட்ட தம்பதியின் வீடியோ வைரலாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகா பகுதியைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரி தேவி பிரசாத், தனது அலுவலக நேரத்தில் மனைவியுடன் சினிமா பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இவர்களின் நடன வீடியோ தேவி பிரசாத்தின் மனைவியுடைய யூடியூப் சேனலில் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, தேவி பிரசாத்தை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.




