கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பணியாற்றும் 2 ஆசிரியர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக சில மாணவிகள் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, 585 மாணவிகளிடம் கல்வித் துறை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து பல மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.




