மகாராஷ்டிரா: வார்தாவில் மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்திருந்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரது வீட்டின் அருகே சோதனை மேற்கொண்டதில், குழி தோண்டி புதைத்திருந்ததை கண்டுபிடித்தனர். வீட்டைச் சுற்றி துர்நாற்றம் வீசிய நிலையில், அருகில் கரப்பான் பூச்சி உருண்டைகள் கிடந்துள்ளன. அந்தப் பகுதியை தோண்டியபோது, சாக்குப் பையில் அந்தப் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.




