Oplus_131072
அரிசி கழுவின தண்ணியை சும்மா விடாதிங்க…
நாம வீட்டுல சாதம் செய்யும் பொழுது அரிசி கழுவுன தண்ணி இருக்கும். அதை நாம கீழே கொட்டிருவோம். ஆனால் இனி அப்படி பண்ணாதீங்க. அதுனால நாம முகம் இளமையை அழகா இருக்கும். சரும நிறத்தையும் அதிகரிக்க உதவும்.
1) அரிசி கழுவின தண்ணிய வச்சி நாம தினமும் முகத்தை கழுவிட்டு வந்தால் முகத்தில் எந்த பருவும் வராது. தோல் சுருக்கம் வராமல் முகம் இளமையாக இருக்கும்.
2) எலுமிச்சை சாறு ஒரு பாதி மற்றும் அரிசி கழுவின தண்ணி ஒரு கப் எடுத்து நன்றாக கலந்துக்க வேண்டும். இதனை முகம் முழுவதும் தடவி சிறிது நேரம் பிறகு கழுவினால் வெயிலால் ஏற்பட்ட கருமை மாறும். இந்த கலவையை முகம் டோனர் ஆகவும் பயன்படுத்தலாம். ஒரு ஸ்பிரே பாட்டிலே ஊற்றி பயன்படுத்தலாம்.
3) முக அழகிற்காக நாம் பயன்படுத்தும் முல்தானி மெட்டி பொடியில் அரிசி கழுவுன தண்ணி ஊற்றி ஃபேஸ் பேக் போட்டால் முக பொலிவை பெறலாம்.
குறிப்பு:
இரவு படுக்க போவதற்கு முன் அரிசி கழுவின நீரால் முகம் கழுவிட்டு படுக்க செல்லுங்கள் அதன் பின் சாதாரண நீரால் முகம் கழுவ வேண்டாம். இவ்வாறு செய்தால் முக சுருக்கம் வராமல் முகம் பொலிவு பெரும்.




