கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 106 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும், 116 ஒருநாள் போட்டிகளிலும், 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட அஸ்வினுக்கு பிசிசிஐ சார்பாக மாதம் ரூ.60,000 வரை ஓய்வூதியம் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




