ஆண்களை விட பெண்களுக்கு அதிக மணி நேரம் தூக்கம் தேவைப்படுவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், பெண்கள் தங்கள் ஒத்த வயதுடைய ஆண்களை விட, 23 முதல் 29 நிமிடங்கள் அதிகமாக தூங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண்களின் தூக்கமும், அவர்கள் தூங்கும் நேரமும் வயது ஏற ஏற குறைகிறது. ஆனால், பெண்களின் தூக்கம் நேரம் ஆரம்பத்தில் இருந்து சீராக இருப்பதாக தெரியவந்துள்ளது. ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக பெண்களில் தூக்கம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.




