ஆக.19-ல் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

 

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

 

குறிப்பாக, நீட் தேர்வு முறைகேடுகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

 

மேலும், அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்ற விசாரணை கோருவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Read Previous

ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி: ரூ.299 முதல் ரூ.799 வரையிலான ப்ரீபெய்ட் திட்டங்கள் நீக்கம்..!!

Read Next

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular