ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி: ரூ.299 முதல் ரூ.799 வரையிலான ப்ரீபெய்ட் திட்டங்கள் நீக்கம்..!!

 

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த பல குறைந்த விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை திடீரென நீக்கியுள்ளது. குறிப்பாக ரூ.299, ரூ.319, ரூ.579, ரூ.619, ரூ.649 மற்றும் ரூ.799 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டங்கள் தற்போது பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

இதனுடன், ஏற்கனவே நடைமுறையில் இருந்த ரூ.859 மதிப்பிலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் விலையையும் ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.899 ஆக உயர்த்தியுள்ளது. ஒரே நேரத்தில் பல மலிவு விலை திட்டங்கள் நீக்கப்பட்டதுடன், மற்றொரு திட்டத்தின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருப்பது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்த கட்டணத்தில் ரீசார்ஜ் செய்ய விரும்பிய பயனர்களுக்கு இந்த மாற்றங்கள் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் திடீர் நடவடிக்கையால் அதன் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Read Previous

220 கோயில்களில் அறங்காவலர் பதவி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Read Next

ஆக.19-ல் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular