அந்தவகையில், ஆட்டு ரத்தத்திலும் மிக அதிகமான இரும்பு சத்து உள்ளது.. இதனால் ரத்தசோகை பாதிப்புள்ளவர்களுக்கு கை கொடுத்து உதவக்கூடியது இந்த ஆட்டு ரத்தம்தான்.. இதனால் ஹீமோகுளோபின் பிரச்சனை தீர்வதுடன், புதிய ரத்தம் ஊறும்.. மேலும் ஆட்டு ரத்தத்தில் சோடியம், கால்சியம், ஒமேகா-3 ,இரும்பு சத்து , பாஸ்பரஸ் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
வைட்டமின்கள்: அதேபோல, வைட்டமின்கள், புரோட்டீன் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இந்த ஆட்டு ரத்தத்தில் இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு இதை தருவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
அசைவ உணவுகளை சாப்பிட்டால் பொதுவாக எடை அதிகரிக்கும் என்பார்கள்.. ஆனால் ஆட்டு ரத்தப் பொரியல் எடையை குறைக்க உதவி புரிகின்றது.. இந்த ஆட்டு ரத்தத்தில் B வைட்டமின் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் புரோட்டீன்களும் நிறைந்துள்ளன..
பெஸ்ட் மருந்து: அதேபோல, மாட்டிறைச்சியை விட நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ஆட்டு ரத்தம் மிகவும் சிறந்த உணவாகும். ஆட்டு ரத்தத்தில் CLA உள்ளதால், இது புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு அமிலம் மற்றும் இது வீக்கத்தை தடுக்கிறது.




