ஆட்டீரல் வறுவல் இனிமே இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!!

தேவையான பொருட்கள்:

ஈரல் அரை கிலோ

பொpய வெங்காயம் 2

இஞ்சி விழுது ஒரு டீஸ்பூன்

பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்

தனியாத் தூள் ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் அரை டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

கடுகு ஒரு டீஸ்பூன்

பட்டை 2

கறிவேப்பிலை ஒரு கொத்து

எண்ணெய் தேவைக்கேற்ப

உப்பு தேவைக்கேற்ப

 

முழு செய்முறை :

 

ஈரலை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

 

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பட்டை இரண்டு துண்டுகள் போட்டு பொரியவிடவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

 

பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும். பின்பு ஈரலை போட்டு தொடர்ந்து உப்புத்தூள் மற்றும் எல்லாத்தூள் வகைகளையும் போட்டு நன்கு கிளறி விடவும்.

 

தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேகவிட வேண்டும். தண்ணீர் முழுவதும் வற்றும் வரை வேகவைத்து நன்கு சுருள கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.

சுவையான ஆட்டீரல் வறுவல் ரெடி…

 

 

Read Previous

வீடே மணக்க ரசப்பொடி எப்படி அரைக்க வேண்டும் தெரியுமா..??

Read Next

உங்கள் வாழ்வில் ஏதேனும் கஷ்டம் வரும் பொழுது மறக்காம இதை மட்டும் செஞ்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular