ஆண் பறவை..!! ஆணுக்கான ஆத்திச்சூடி..!! படித்ததில் கண்ணீர் வர வைத்த பதிவு..!!
நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆணின் பதிவுதான் இது.
அவன்
ஆண்மகன் என்பதால் தான்
இதயத்தில் அவ்வளவு வழிகள் இருந்தும்
ஈரத்தை கண்களில் மட்டும் காட்டுவதே இல்லை அவன்
உள்ளம் முழுவதும் குடும்ப பொறுப்பு
ஊர் ஊராய் சென்று உழைப்பதே அவன் பிழைப்பு
எத்தனை பாரங்கள் அவன் மீது இருந்தாலும் அதனை
ஏற்றுக்கொள்ள மறுப்பதே இல்லை அவன்
ஐயம் இல்லாமல் குடும்பம் வாழ
ஒவ்வொரு நாளும் ஓய்வெடுக்காது
ஓடாய் உழைத்தே தேய்ந்தவன் அவன்
ஒளடதமாய் அவனுக்கு இருப்பதே அவனே தான்.
கண்டிப்பாக இதை படிக்கும் போது இதை முழுமையாக புரிந்து கொண்டவர்களுக்கு கண்களில் கண்ணீர் வரும். ஆண்களை கண்டிப்பாக ஒவ்வொரு பெண்களும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். அது அப்பாவாக இருந்தாலும் சரி அண்ணனாக இருந்தாலும் சரி மகனாக இருந்தாலும் சரி கணவனாக இருந்தாலும் சரி.




