Oplus_131072
ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்.
ஆண்கள்:
ஆண் இயல்பாக தர்க்கரீதியாக சிந்திக்கும் இயல்பு கொண்டவன். உணர்ச்சி வசப்படாது நிதானமாக அணுகும் தன்மையுடையவன்.
ஆண் தன் ஆண்மை மதிக்கப்பட வேண்டும்
என்று எதிர்பார்க்கிறான், தன் பெறுமதி உணரப்பட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறான்.
வார்த்தைகள் மூலம் அல்லாமல் தன் செயல்களால் அன்பை வெளிப்படுத்தும் இயல்பு கொண்டவன்.
பிரச்சனைகளின் போது பெண்ணுக்கு
மாற்றாக அமைதியையும் மெளனத்தையும்
கடைப்பிடிக்கும் சுபாவம் கொண்டவன்.
பெண்கள்:
பெண் இயல்பாக உணர்ச்சிவசப்படும் இயல்பு கொண்டவள். பேச்சால் தொடர்பு கொண்டு பேச்சால் தீர்வு காண ஆசைப்படுவாள்.
எப்போதும் தன் பேச்சு கேட்கப்பட்ட வேண்டும், தன் செயல் பாராட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.
வார்த்தைகளாலும் கவனிப்பாலும் தன் காதலை வெளிப்படுத்தும் இயல்பு கொண்டவள்.
பிரச்சினைகளின் போது ஆணுக்கு மாற்றாக அதிகம் பேசிப் பேசி கதை வளர்க்கும் சுபாவம் கொண்டவள்.
முடிவுரை
பெண்ணின் பேச்சு கேட்கப்பட வேண்டும் என்பதும் அவளின் உணர்வு கவனிக்கப்பட வேண்டும் என்பதும் அவளின் முதலும் முடிவுமான எதிர்பார்ப்பாகும்.
ஆணின் மெளனம் அசட்டை என்றாகாது. அது அவன் சிந்திக்க எடுக்கும் நேரமாகும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
கருத்து வேற்றுமைகள் தவிர்க்க முடியாதவையாகும். புரிந்துணர்வே மகிழ்ச்சியான வாழ்வின் அடித்தளமாகும்.




