ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் சிலர், ஆபாச நடனம் ஆடியது, பெண்களுக்கு ஜன்னல் வழியே விபூதி அடித்தது போன்ற செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அர்ச்சகர்கள் தமிழக அரசின் அறநிலையத்துறை நடத்தும் அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயின்றவர்கள். அதை மறைத்து ஒட்டுமொத்த அர்ச்சகர்கள் சமூகத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதா என மதுரை மீனாட்சி அம்மன் உட்பட கோயில்களின் பாரம்பரிய அர்ச்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.




