ஆரம்பம் முதல் கடைசி வரை நமக்கு மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு அது அம்மா அப்பா..!! படித்ததில் பிடித்தது..!!

ஆரம்பம் முதல் கடைசி வரை நமக்கு மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு அது அம்மா அப்பா அன்பு மட்டுமே ❤

அம்மா அப்பா❤️ தினம் வைத்து கொண்டாட அவர்கள் உறவுகள் அல்ல… உயிர்கள்! அவர்களை, ஒவ்வொரு நாளுமே, கொண்டாடத்தான் வேண்டும் 😊💯

நம்மள அழ வச்சு, அப்புறம் சிரிக்க வச்சா அது அப்பா! அழ வச்சு, இன்னும் எதுக்குடி அழுதுட்டே இருக்கேனு கேட்டு 4 அடி கொடுத்து அழாதேனு சொன்னா அது அம்மா!

நீ தேடி சென்றாலும், விலகி செல்வது மற்றவர்கள்! நீ விலகி சென்றாலும், உன்னை தேடி வருவது பெற்றவர்கள்!

வாழ்க்கைல் கடைசிவரை தனக்குனு சமைக்காத ஜீவன் “அம்மா” தனக்குனு சம்பாதிக்காத ஜீவன் “அப்பா”.

தனது உதிரம் கொடுத்து இவ்வுலகிற்கு அறிமுகப் படுத்துவாள் தாய்.. தனது உயிரை கொடுத்து இவ்வுலகை காண்பிப்பவர் தந்தை…
தாங்கிக் கொள்ள எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் “அப்பா” “அம்மா” என்ற உறவுக்கு இணையாக இவ்வுலகில் எந்த சொந்தமும் இல்லை!
ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றால், முதலில் தாய்க்கு செய்… ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால் முதலில் தந்தைக்கு செய்…
அம்மாவின் வயிற்று கருவறை பாக்கியமும், அப்பாவின் மார்பின் கருவறை பாக்கியமும் வாழ்நாளில் என்றுமே தீர்க்க முடியாத கடன்கள்!
காதல் மட்டுமே புனிதமானது அல்ல! கைகால் வலிக்க, நாள்முழுவதும் உழைத்த தாய் தந்தையரின் உழைப்பு அதைவிட புனிதமானது!
உன் வாழ்க்கை அழகுபெற, தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தாய் தந்தையரை விட்டுச் சென்று நீ அரச வாழ்க்கை வாழ்ந்தாலும், அது பயனற்றதே!
நல்லதோர் குடும்பம், பல்கலைக்கழகம் என்பர்! அம்மா அப்பா என்பதே தாரக மந்திரம், பின்பற்றி வாழ்ந்து பார் படைப்பாய் பல சரித்திரம்!
நாட்கள் கடந்து போகலாம்! வருடங்கள் கடந்து போகலாம்! மணித்துளிகள் கடந்து போகலாம்! ஏன் காதலும் கடந்து போகலாம்! என்றும் கடந்துபோகாமல் நிலையானது வார்த்தைகளைக் கொண்டு விளக்க முடியாத இருஉறவுகள், தாய் தந்தை மட்டுமே!

Read Previous

டிக்-டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா?.. – மத்திய அரசு விளக்கம்..!!

Read Next

உயிரிழந்த வரலட்சுமி.. குழந்தைகளின் கல்வி செலவை திமுக ஏற்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular