சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டிய நிலையில் கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழை நீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். அவர் மறைவு தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். அவர் குழந்தைகளின் கல்வி செலவை திமுக ஏற்றுக்கொள்ளும்” என்றார்.




