Oplus_131072
தண்ணிக்குள்ள
மூழ்கினவானுக்குத் தான்
தெரியும் மூச்சு காற்றின் அருமை…
உழைத்தவனுக்கு தான் தெரியும்
பணத்தின் அருமை..
நிழலின் அருமை
வெயில் வேலை செய்வோருக்குத் தான் தெரியும் ..
மழையின் அருமை..
பயிர் வாடும் போது தான்
தெரியும்..
பசியின் அருமை
பானையில் சோறு இல்லாத போது தான் தெரியும்…
வீட்டின் அருமை வீடு
இல்லாதவர்களுக்கு தான்
தெரியும்….
வேலையின் அருமை
வேலையை இழந்தவர்களுக்கு தான் தெரியும்.
படிப்பின் அருமை…
கைரேகை வைப்பர்களுக்கு தான் தெரியும்..
வெளிச்சத்தின் அருமை
கரண்ட் இல்லாத வீட்டில் வசிக்கும் போது தான் தெரியும்..
தாயின் அருமை
உனது அப்பா இரண்டாம் திருமணம் முடித்த பிறகு தான்
தெரியும்..
தந்தையின் அருமை
நீச்சல் பழகும் போது தான்
தெரியும்…..
தாய் மாமாவின் அருமை
பெண் பிள்ளைகள் வயதுக்கு
வரும் போது தெரியும்…
அத்தையின் அருமை
அண்ணன் தம்பி மகன்/ மகள்
ஆய் இருக்கும் போது தான்
தெரியும்….
சித்தப்பாவின் அருமை
சைக்கிள். பழகும் போது தான்
தெரியும்..
சித்தியின் அருமை
உன்னை உன் தாய் அடிக்கும் போது தான் தெரியும்…
அண்ணன் தம்பியின் அருமை
உன்னை ஒருவன் கை நீட்டும் போதுதான் தெரியும்…
அக்காவின் அருமை
உன் தாய் சரி இல்லாத போது தான் தெரியும்..
பாட்டியின் அருமை
ஒரு பெண் பிரசவத்திற்கு பிறகு தான் தெரியும்..
தாத்தாவின் அருமை
கோவில் திருவிழாவில் தான்
தெரியும்..
குழந்தையின் அருமை
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தான் தெரியும்..
ஒரு உயிரின் அருமை
பெற்ற தாய்க்குத்தான்
தெரியும்…..
அன்பின் அருமை
அது இல்லாமல் தவிப்பவர்களுக்கு தான்
தெரியும்..
வலியின் அருமை நம்பிக்கை துரோகம் செய்யும் போது தான் தெரியும்..




