திமுகவை எதிர்த்து திராவிட மாடலா என சீமான் ஆவேச பேச்சு..
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்துவது ஏன் என திமுக அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார், இது தொடர்பான அவரது அறிக்கையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக கண்டித்துள்ளார் மேலும் தற்காலிக மருத்துவர் தற்காலிக செவிலியர் அரசு ஊழியர்களை தற்காலிகமாக்குவது தான் திராவிட மாடலா விமர்சித்துள்ளார், மேலும் மருத்துவ காலி பணியிடங்களையும் செவிலியர் காலி பணியிடங்களையும் நிரப்பாமல் இருப்பதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர், இன்னும் எவ்வளவு காலம் அவகாசம் எடுத்துக் கொள்ளும் இந்த திராவிட ஆட்சி உடனே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நிரப்ப வேண்டும் என்றும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் மருத்துவர் வழங்க வேண்டும் என்றும் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்..!!




