இதுதான் வாழ்க்கை..!! இவ்வளவு தான் வாழ்க்கை..!!

Oplus_131072

இதுதான் வாழ்க்கை! இவ்வளவு தான் வாழ்க்கை !

உடையின்றி பிறந்தோம்!

உடையின்றி இறப்போம்!

பொருள் செல்வம் இன்றி பிறந்தோம்!

பொருள் செல்வம் எதுவும் இல்லாமல் செல்வோம்!

நமது முதல் குளியலை

யாரோ ஒருவர் செய்தார்கள்!

நமது கடைசி குளியலை

சொந்தங்கள் செய்வார்கள்

இவ்வளவு தான் வாழ்க்கை!

எதற்கு இத்தனை வெறுப்பு!

இத்தனை கோபம்!

இத்தனை பொய்!

இத்தனை சுயநலம்!

இத்தனை பேராசை!

அன்புடன் இருப்போம்!

நல்லதை செய்வோம்!

பூமியில் வாழும் நாட்கள் குறைவு!

தேவை இல்லாத விடயத்தில் நமது நேரத்தை வீணாக்க
வேண்டாம்!🌹🌹

நீங்க என்ன விரும்பறீங்களோ அதுதான் தரும்
அது தான் கிடைக்கும்
அதுதான் வரும்

அது போலத் தான் வாழ்க்கையிலும்
எதை நீங்க விரும்பிப் போறீங்களோ

எதை நீங்க ஆசைபடறீங்களோ
எதை நீங்க கனவா வைச்சிருக்கீங்களோ
எதை அடையனும்னு குறிக்கோளோட
சுத்தறீங்களோ

அதுதான் நிச்சயம் வரும்
அதுதான் கண்டிப்பா கிடைக்கும்
அதுதான் கைகளில் தவழும்

எதைத் தேடறீங்களோ அது உங்களைத் தொடரும்

ஆகையால் உன் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டே இரு
உனக்கான வெற்றி கிடைக்கும் வரை

பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம்
தோல்வி வந்து கொண்டே தான் இருக்கும்

பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப் போடுங்கள் வெற்றி உங்கள் காலடியில்

முயற்சி உனதானால் வெற்றியும் உன் வசமே..

Read Previous

ஒருமுறை குலோப்ஜாமுன் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மக்களே..!!

Read Next

உங்கள் வீட்டில் திண்ணை இருக்கிறதா..?? அந்த திண்ணையில் உட்கார்ந்து அந்த மகோன்னதமான வசந்தத்தை அனுபவித்து இருக்கிறீர்களா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular