ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர், “ஸ்ரேயாஸை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அவருக்கு பதிலாக யாரை விலக்க வேண்டும்? அணி தேர்வு என்பது எளிதல்ல” என கூறினார். மேலும், அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி வருவதால் அவரை தேர்வு செய்தோம் என்றார்.




