உடலில் நோய் ஏற்படுவதற்கு முன்பு நோய் ஏற்பட்டு இறுதி கட்டத்திற்கு அடைவதற்கு முன் சில அறிகுறிகள் நம் கண்களுக்கு தென்படும், அந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை உட்கொண்டு நமது ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும்..
இன்றைய காலத்தில் பலருக்கும் அறிகுறிகளை இல்லாமல் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது இருப்பினும் ஒரு சில அறிகுறிகளை வைத்து இதை நாம் அறிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர், தொடர்ச்சியாக காரணம் இல்லாத சோர்வு உடலில் எந்த இயக்கமும் இல்லாத போதும் மூச்சு விடுவதில் சிரமம் உடலின் மேற்பகுதியில் வலி வேலை செய்யாமல் இருக்கும்போது தொடர்ச்சியாக வியர்ப்பது போன்ற மற்ற எல்லாம் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள், மேலும் பசியின்மை பதட்டம் இதய துடிப்பு சில நேரங்களில் அதிகமாக துடிப்பது போல் உணர்வது போன்றவற்றையெல்லாம் மாரடைப்பின் காரணமாகவே மருத்துவர்கள் கூறி உள்ளனர், இந்த அறிவீர்கள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அதற்கான மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்..!!



