சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய ஐந்து பழங்கள் குறித்து மருத்துவர் அருண் கார்த்திக் விவரித்துள்ளார். அந்த பழங்களின் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்…
சர்க்கரை நோயாளிகளும் கவலை இன்றி சாப்பிடக்கூடிய பழங்கள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து டாக்டர் அருண் கார்த்திக் பரிந்துரைத்துள்ளார் அவை என்னவென்று பார்க்கலாம், ஆப்பிள் மற்றும் பேரிக்காய் ஆப்பிள் மற்றும் பேரிக்காய் ஆகிய இரண்டிலும் கிளை செமிக் இன்டெக்ஸ் 35 முதல் 36 என்ற அளவில் உள்ளது மேலும் கிளைசெமிக் லோடு 5 ஆக உள்ளது இந்த பழங்களில் சர்க்கரை அதிகரிக்கும் தன்மை மிகக் குறைவு ஆப்பிளில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது மேலும் இந்த இரண்டிலும் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது, ஆரஞ்சு ஆரஞ்சு பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 30 க்ளைசெமிக் லோடு 4 மேலும் இதில் பெட்டில் எனப்படும் நார்ச்சத்துள்ளது இதன் மூலம் கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படுகிறது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழம் இதுவாகும், ஸ்ட்ராபெரி படத்தில் கிளைசெமிக் இன்டெக்ஸ் 25 மேலும் கிளைமேட் லோடு இரண்டு என்ற அளவில் உள்ளது இதை சாப்பிடுவதால் தோல் சுருக்கங்கள் கட்டுப்படுத்தப்படும் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது இந்த வகையான பழங்களை அதிகமாக மருந்து தெளித்து பார்ப்பதால் நன்றாக கல் உப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்,நாவல் பழம் மற்றும் மலை நெல்லிக்காய் இந்த இரண்டின் தன்மைகளும் ஒன்றாகவே இருக்கும் இதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் இருவது கிளைசெமிக் லோடு இரண்டு ஆகும் நெல்லிக்காயும் பழங்கள் வரிசையில் தான் வரும் என மருத்துவர் கூறுகிறார் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை இதை குறைக்கிறது, கொய்யாப்பழம் கொய்யா பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 15 அதிகப்படியான நார்ச்சத்து இதில் உள்ளது பெரும்பாலான வைட்டமின்கள் இதில் நிறைந்துள்ளது எனவே இவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்று மருத்துவர் பரிந்துரைக்கிறார்…!!!




