இந்த சட்னியை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்துப் பாருங்கள்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

நாம் இட்லி தோசைக்கு பெரும்பாலும் சட்னியை தான் தொட்டு சாப்பிடுவோம். ஆனால் நமது வீட்டில் ஒரு சில வகை சட்னிகளை தினமும் செய்து கொடுப்பார்கள். ஆகையால் அது சலித்து விடும். இன்று நாம் நமது உடலுக்கு நன்மை தரும் வேர்க்கடலையே வைத்து புதினா கொத்தமல்லி சேர்த்து சட்னி எப்படி செய்வது என்று காண்போம்.

தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை – 1/2 கப் தேங்காய் துருவல் – சிறிதளவு
புதினா, கொத்தமல்லி – 1/2 கட்டு
பச்சை மிளகாய் – 7
இஞ்சி – சிறிதளவு
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

புதினா மற்றும் கொத்தமல்லியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அதனை அடுப்பில் பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின் வறுத்த வேர்க்கடலையுடன் கொத்தமல்லி புதினா தேங்காய் துருவல் பச்சை மிளகாய் இஞ்சி புளி ஆகியவற்றை சேர்த்து ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான கடுகு உளுந்து ஆகியவற்றை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியை அதன் மீது ஊற்றி கிளற வேண்டும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான வேர்கடலை சட்னி தயார்.

Read Previous

இஞ்சி டீ குடிக்கும் நபரா நீங்கள்..!! அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா..!!

Read Next

சூரியகாந்தி விதையில் இவ்வளவு மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளதா..?? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular