நாம் அனைவரும் டீயை மிக அதிகமாக குடித்து வருகிறோம். இங்கு பல பேர் டீ இல்லாமல் வேலைகளை செய்ய மாட்டார்கள். அந்தளவுக்கு டீக்கு அடிமையாகி விட்டனர். இதில் நன்மைகளும் இருக்கிறது தீமைகளும் இருக்கிறது. எதையும் அளவோடு எடுத்துக் கொள்வதில் எந்த பிரச்சனைகளும் வராது. நாம் சுறுசுறுப்பாக இருக்க காலை எழுந்தவுடன் தேநீர் குடிப்பது நல்லது.
இவற்றில் இஞ்சி டீ பெரும்பாலும் கடைகளில் விற்பனையாகும். இதை நிறைய பேர் நல்லது என்று நினைத்து அதிகமாக குடிப்பார்கள். ஆனால் இஞ்சி டீ அதிகமாக குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் இல்லை என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. குளிர்காலங்களில் இஞ்சி டீ குடித்தால் எந்தவித பிரச்சினையும் கிடையாது.
அது நமது உடலின் செரிமான மண்டலத்தை வலுப்படுத்தி ஜீரண சக்தியை அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் உடலின் வெப்பத்தையும் அதிகரிக்கும். ஆகையால் கோடை காலங்களில் குடிக்கவே கூடாது. அதேபோல இஞ்சி டீ நமது உடலில் இருக்கும் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ஆகையால் சர்க்கரை நோயாளிகள் இஞ்சி டீ தயங்காமல் குடிக்கலாம். ஆனால் அதை அளவோடு குடிக்க வேண்டும். இல்லையெனில் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும்.




