இந்த பாயாசத்தை உங்க வீட்ல இருக்கிற குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை..!!

நமது உடல் நலனுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் ஒரு சில தின்பண்டங்களோ நமது உடலுக்கு தீங்கும் விளைவிக்கிறது. ஆனால் ஆரோக்கியமான உணவுகளை வைத்து தின்பண்டம் செய்து சாப்பிட்டால் அந்த பிரச்சனைகள் வராது. பாயாசம் நம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். ஆனால் அதில் சர்க்கரை மிகவும் அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்த பாயசத்தை சத்தாக சிவப்பு அரிசியில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருள்கள் : 

சிவப்பரிசி – 5 தேக்கரண்டி
பால் – ஒரு லிட்டர்
ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி பாதாம் – 12
சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை :

சிவப்பு அரிசியை ஜாரில் போட்டு ரவை போல உடைத்து எடுத்துக் கொள்ளவும். அதன்பின் பாலுடன் உடைந்த அரிசியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்த பிறகு அதனுடன் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரையை நன்கு கலந்தவுடன் பாதாம் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான சிவப்பு அரிசி பாயாசம் தயார்.

Read Previous

வாய்ப்புண் முதல் வாய் துர்நாற்றம் வரை அனைத்தையும் போக்கும் பனங்கற்கண்டு..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

இஞ்சி டீ குடிக்கும் நபரா நீங்கள்..!! அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular