இந்த பூமியில் ஒவ்வொரு மனிரும் சிறப்புக்கு உரியவர் தான்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ, படித்தவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம்.

இந்த பூமியில் ஒவ்வொரு மனிரும் சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே..

உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள்.

டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள்.அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார்.

மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய்,
”உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார்.

அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள்.

உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் *வெட்கப்பட்டார்* ..

Read Previous

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது..!! எல்லா அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

நான் இருட்டில் இருந்தபோது விளக்குடன் வந்தவர்களை ஒருபோதும் மறக்கவே மாட்டேன்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular