இனிமை!!!
முகத்தை அழகாக்க ஒரு புன்னகை போதுமே!!!
கண்களை அகற்றி மிரட்டினால் குழந்தைகளும் பகை கொள்ளும்
உதடுகளை விரித்து சிரித்தால் விலங்குகளும் நட்பு கொள்ளும்.
அன்பு எனப்படுவது மற்றவர் மனம் மகிழ்ச் செய்தல்
பண்பு எனப்படுவது மற்றவர் மனம் வாடாது பழகுதல்
பொன்னகை கழுத்துக்கு அழகு தரும்
புன்னகை முகத்துக்கு அழகு தரும்
ஆயிரம் பொருள்நகை கொடுத்து சாதிக்க இயலாததை
அன்பான ஒருபுன்னகை கொடுத்து சாதிக்க இயலுமே
மலரானது வண்டுகளை ஈர்ப்பதுபோல
சிலர் முகம் மனிதரை கவர்ந்திடும்
காந்தமது துகள்களை ஈர்ப்பது போல
சிலர் முகம் இதயங்களை கவர்ந்திடும்
உழைக்கும் போது இரும்பின் உறுதி வேண்டும்
உறவாடும் போது கரும்பின் மொழி வேண்டும்
அடித்தாலும் மென் மலர் செண்டால் அடித்தால் வலிக்காது.
இனிய சொல்லால் சொன்னால் வலிக்காது.
நாக்கு என்பது தேனும் தென்றலும்
கலந்து செய்தால் மந்திரக் கோலாகும்
நாக்கு என்பது தேளும் தீயும்
கலந்து செய்தால் கொலை ஆயுதமாகும்
வன்சொல்லைவிட கொடிய நஞ்சு எதிலும் இல்லை
இன்சொல்லை விட இனிய மருந்து உலகில் இல்லை
நற்குணவான்களின் நேய மொழி தேன் போல் இனிக்குமே
துர்குணவான்களின் தீயமொழி தீப்போல் எரிக்குமே
சில வாசகங்களுக்கு
உள்ளத்தின் உள்ளே
இராசயண
பௌதீக மாற்றங்களை
ஏற்படுத்தும் வல்லமையுள்ளது..
நமது ஒரு வார்த்தை
எங்கேயாவது
எப்போதாவது
எவர் ஒருவருக்காகவாவது
அற்புதத்தை நிகழ்த்தக்கூடும்..
நீங்கள் நீட்டுவது ஒரு கையாக இருக்கலாம்
ஆனால் அது ஒருவருக்கு “”வாழ்க்கை”யாக இருக்கலாம்..
அட
ஒரு கைப்பிடி சோறு வேண்டாம்
ஒரு கைப்பிடித்து
இன்னுரை
சொல்லி
தூக்கி விடலாமே
வாழ்த்தலாமே
வாழ்த்துங்கள்
வாழ்த்தப்படுவீர்கள்!




