இன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து சரி செய்யலாம்…
முது தண்டு வலி இருப்பவர்கள் தினந்தோறும் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் முதுகு தண்டு வலி நீங்கும், ரத்த அழுத்தம் குறைவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினந்தோறும் எலுமிச்சை பழம் சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் குறைவாகவும் இருக்கும், ஞாபக சக்தி பெருக வல்லாரையை வாரத்திற்கு இரண்டு நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம், பித்த மயக்கம் நீங்க புளியாரை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் இதனால் பித்தம் நீங்கும், உடல் சூடல் அவதிப்படுபவர்கள் உடல் சூடு அகல முருங்கைக் கீரையை வாரத்திற்கு நான்கு நாட்கள் சமைத்து சாப்பிடுவதன் மூலம் சூடு தணிந்து உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படும், ரத்தத்தை சுத்திகரிக்க வேண்டும் என்றால் தினமும் சமைக்கும் பொழுது உணவில் வெள்ளை பூண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும் இதன் மூலம் வாய்வு தொல்லை நீங்கி ரத்தம் சுத்தகரிக்கப்படும், கண்பார்வை அதிகரிக்க கேரட் புதினா ஏலக்காய் போன்ற முக்கிய பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், கடுமையான ஜலதோஷத்திற்கு தேனும் எலுமிச்சையும் சிறந்த மருந்தாக விளங்குகிறது, உங்கள் வாழ்நாள் நீடிக்க வேண்டுமென்றால் தினந்தோறும் நெல்லிக்கனியை சாப்பிட்டு வரலாம், காது மந்தம் போக தூதுவளை ரசம் தூதுவளை சட்னி என்று செய்து சாப்பிடலாம் இதனால் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் செயல்படும்..!!




