Oplus_131072
”இன்பமும், துயரமும்..’’
வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் இன்பம், துயரம் போன்றவை வரவே செய்யும். இது இயற்கை.
🌹மேடு,பள்ளங்கள் இருப்பது போல மனிதனுக்கும் இன்ப, துன்பம் இரண்டுமே மாறி மாறி வருவது இயல்பு.
🌹மின்சாரத்தில் ”positive, negative” என்ற இரண்டும் இருந்தால் தான் ஒளியை நாம் பெற முடியும்.
🌹இன்பம், துன்பம், சுகம், துக்கம், வெற்றி,தோல்வி என அனைத்தும் கலந்திருப்பது தான் வாழ்க்கை.
🌹வாழ்க்கை அனைவருக்கும் சுலபமாக அமைந்து விடுவதில்லை. கோடீஸ்வரனாகவே இருந்தால் கூட, அவர்களுக்கு இருக்கும் வலி என்ன,, அவர்கள் கடந்து வரும் கடினமான சூழல் என்ன என்பது குறித்து நாம் அறிய இயலாது.
🌹பொதுவாகவே, ஒரு தொழிலதிபர், அரசியல்வாதி, நடிகர் இருந்தால், ‘’அவங்களுக்கு என்னப்பா சொகுசான வாழ்க்கை, ஆடம்பரமா இருக்காங்க.’’. என்று நாம் இயல்பாகக் கூறுவதுண்டு.
🌹ஆனால், அந்த இடத்தைப் பிடிக்க அவர்கள் எத்தனை துயரங்களை, தோல்விகளை, தடைகளைக் கடந்து வந்தார்கள். அவர்களது கடந்த கால வாழ்க்கையானது எத்தகைய கரடுமுரடான பாதையாக இருந்தது என நாம் அறிந்து இருக்க மாட்டோம்.
🌹அதில் ஒருவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்..( ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்..)
🌹பெரும்பாலானோருக்கு ‘’ஸ்டீவ் ஜாப்ஸ்’’ என்றாலே முதலில் எண்ணத்தில் உதிப்பது ஆப்பிள் தான். இவர் உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலுக்கு முந்தியடிக்கும் போட்டியில் கலந்து கொண்டவர் அல்ல.
🌹தனது அயராத உழைப்பால், எண்ணற்றத் தடைகளை, தோல்விகளைக் கடந்து வந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
தனது வாழ்வின் சில கட்டங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் பொருளாதாரரீதியாக மிகவும் கீழ் மட்டத்திற்குச் சென்றுள்ளார். இது பலரும் அறியாத உண்மை.
🌹வாரம் ஒரு முறையாவது நல்ல உணவு கிடைக்கும் என்பதால் சில நாட்கள் ஏழு மைல் தூரம் நடந்து சென்று ஒரு கோவிலில் வழங்கப்படும் உணவை உண்டு உள்ளாராம் ஸ்டீவ் ஜாப்ஸ்.
🌺வாழ்க்கையில் நமக்கு வரும் , துன்பங்கள், துயரங்கள் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் போது நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதில் தான் இருக்கிறது வெற்றியும், தோல்வியும்.
🌺நமக்கு ஏற்படும் துயரங்களை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது தான் மிக முக்கியம்.
”How You make it” என்பதை விட.,
”How you take it” என்பது தான் முக்கியம்.
🌺வெற்றிப் பெற என்ன செய்ய வேண்டும் என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
🍁புரட்சிகரமாக செயல்களை செய்து, வெற்றிப் பாதையை நோக்கிச் சென்று வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டும்.




