Oplus_131072
இன்று உலக தாய்ப்பால் வாரத்தின் துவக்க நாள். தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம் குழந்தை பிறந்ததுமே தாய்ப் பால் கொடுப்பது மிகவும் அவசியம். பிறந்த குழந்தைக்கு வழங்கப்படும் முதல் உணவு தாய்ப்பால் தான். தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர் கொழுப்பு புரதம் சர்க்கரை தாதுப் பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ், கால்சியம், வைட்ட மின்கள் ஆகியவற்றை மார்பகச் சிற்றறைகள் பிரித்து பாலாக மாற்றுகின்றன. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு வலுப்படுகிறது. மன அமைதி, மகிழ்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. கையில் எடுத்து மார்போடு அணைத்து பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட்டு அது மனநிறைவோடு காணப்படுகிறது..
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், குழந்தைகளுக்கு அதனை தவறாமல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த வாரம் மக்களுக்கு உணர்த்துகிறது. ‘




