கடந்த பல ஆண்டுகளில் இட்லி,தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்து கொண்டே போகிறது.
இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.
மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது இன்று.
ஆட்டுகல்லில் (குடைகல்) மாவு ஆட்டும் காலம் கடந்து, வெட் கிரைண்டர் வாங்கி கொடுத்தும் ஏன் இந்த நிலை???
இந்த நிலைக்கு நவீன கணவர்கள்தான் மிக முக்கிய காரணம்..! வீட்டிலேயே மாவை ஆட்ட சொல்லுங்க அன்பு நண்பர்களே.
கடையில் விற்கும் மாவு ஒரு உயிர்கொல்லி ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை.
இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது.
4 முதல் 5 நாட்கள் வரை மாவில் புளிப்பு வாசனை வராமலும் மாவு கெடாமலும் இருக்க, நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், நாம் கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் BoricAcid_ஆரோட்மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர் சிலர்.
அதாவது ஒரு நாளைக்கு 3 – 4 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால் பல தீமைகள் உண்டாகும் அபாயம் இருக்கின்றது.
என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும்.!ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் சுத்திகரிப்பு செய்யாத தண்ணிரே பயன்படுத்த படுகிறது.
அம்மா இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி( ஆண்டி பயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத்தடுக்கும் ஆற்றல் உள்ளது.
கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை.! மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( –24 )மைனஸ்24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து பல உடல் நலக்குறைவுகளைதரும் அபாயமும் உள்ளது.
சில தவிர்க்க முடியாத சந்தர்பங்களில் நமக்கு நன்கு தெரிந்த மாவில் கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசைமாவுகளை மட்டும் வாங்குவதோடு, முன், பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலமும், உங்களை நீங்களே பாதுகாப்பதும் கூட. முடிந்தவரை அவரவர்கள் வீட்டிலேயே இட்லி தோசைக்கான மாவை தயார் செய்யுங்கள்.
உணவே மருந்து என்பதனை மறந்து விடாதீர்கள்.




