வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம் இதற்கு தினமும் காலை மற்றும் மாலையிலும் தேங்காய் பாலுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்…
வருட கணக்கில் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரை சாப்பிட்டு வருபவர்கள் மூன்று மாதங்களுக்கு இந்த அசை(சீரகம்) சூரணத்தை சாப்பிட்டு வர படிப்படியாக ரத்த அழுத்தம் கட்டுப்படும் அதன் பிறகு அடிக்கடி ரத்த அழுத்த அளவை பரிசோதித்து மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும், நெருஞ்சி விதை வெள்ளரி விதை இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டு வர கல்லடைப்பு குணமாகும், நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் நீங்கும், வெங்காயத்தின் தோலை உரித்து விட்டு வெங்காயத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து அளவாக தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும் நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டி வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுறுசுறுப்பில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை குணமாகும், அண்ணாச்சி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் நான்கு ஸ்பூன் ஓமம் பொடி செய்து சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் அதை அப்படியே மூடி வைத்து மறுநாள் காலை அந்த கலவை வடிகட்டி வெறும் வயிற்றில் தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டு வர தொப்பை குறையும், ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்ட காய்ச்சி பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும், வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடிவேறு கால்கள் தடவி நன்கு ஊரியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளர்பத்துடன் கண் எரிச்சல் உடல் சூடு தணியும்…!!




