கும்மிடிபூண்டி கவரப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை இன்று (டிச.30) நடைபெற்றது. அப்போது, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் பிரச்சார வாகனத்தில் கலந்துகொண்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.




