ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் சோலங்கி என்பவர் கடந்த ஆண்டு ரூ.5 லட்சத்திற்கு மின்சார ஆட்டோவை வாங்கியுள்ளார். ஆனால், கூறியபடி மைலேஜ் தராததால் ஆத்திரமடைந்த அவர் ஷோரூம் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். ஷோரூம் ஊழியர்கள் கூறிய 180 கி.மீ மைலேஜுக்கு பதிலாக 70-74 கி.மீ மட்டுமே கிடைத்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து போலீசார் மோகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.




