இபிஎஸ் என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இல்லை என டெல்லியில் இருந்து தகவல் வந்ததால்தான் நாங்கள் என்டிஏ கூட்டணியில் இருந்தோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். இபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து இன்று (செப் 16) பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், நாங்கள் என்டிஏ கூட்டணியில் முன்பே இணைந்துவிட்டோம். அதிமுக தாமதமாகத்தான் இணைந்தது. பாஜகவில் இருக்கும் சில நலம்விரும்பிகள் எங்கள் விருப்பத்திற்கு மாறாக பேசியதால் தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றார்.




