பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதன்பின்னர் அவ்வப்போது மீனா மறுமணம் செய்ய போகிறார் என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீனா, மற்ற நடிகர்களுடன், குறிப்பாக அவரது கணவரின் மறைவுக்குப் பிறகு, தன்னை பற்றி பரவும் செய்திகள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆழமாகப் பாதித்ததாக கூறினார்.




