இருமல் குணமாக கண்டிப்பா இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க..!! நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!!
இருமல் நோய் குணமாக கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு எடுத்து அதில் சர்க்கரை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு கபம் கலந்த இருமல் நீங்கும். அதுமட்டுமின்றி வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்து பொடி செய்து தேனில் குழைத்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம். வெங்காயம் 150 கிராம் மற்றும் சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும் இந்த வெங்காயச்சாற்றில் சர்க்கரையை சேர்த்து பாகுபதமாக காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காய பாகை ஒரு வேலைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.




