வெற்றிலை தீபம் ஏற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!
முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றுவார்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இருப்பினும் வெற்றிலை தீபம் ஏற்றுவது எப்படி என்பதற்கான முழுமையான விளக்கம் நம்மில் பலருக்கும் தெரியாது அதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
ஒரு சிறு கொடி நட்டாளே போதும் அந்த பகுதியை ஆக்கிரமித்து வளமாக படர்ந்து வளரும் தன்மை கொண்டதுதான் வெற்றிலை. வெற்றிலை எனும் போது சேர்ந்து வெற்றியும் கூடவே வரும் என்பது ஐதீகம் வெற்றிலை அன்றைய புராண காலங்களில் இருந்து இன்றுவரையிலும் சுப விசேஷங்களுக்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ஒரு புனித பொருளாகும். இந்த வெற்றிலையில் தீபம் ஏற்றி வழிபடும் போது வளமான வாழ்வும் வெற்றியும் நம்மை வந்து சேரும் என்பதே இதன் காரணம்.
வெற்றிலை தீபம் ஏற்ற ஆறு வெற்றிலை எடுத்து தாம்பலத்தில் மயில் தோகை போல விரித்து அதன் நடுவில் அகல் விளக்கு வைத்து அதில் குங்குமம் மஞ்சள் மற்றும் பூ வைத்த நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். வெற்றிலை காம்பில் பார்வதி தேவி குடி இருக்கிறார்.
ஆகையால் ஐந்து வெற்றிலை எடுத்து காம்புகளை கிள்ளி இந்த தீபத்தில் போட்டு ஏற்றும் பொழுது மிகவும் மனமாகவும் நிறைவான பலனும் தரும் என்பது ஐதீகம். வெற்றிலை தீபம் ஏற்றுவதற்கு முன்பு கண்டிப்பாக இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.




