❤️💕❤️ஒரே வயிற்றில் பிறந்து..
ஒரே தொட்டிலில் தூங்கி…
ஒரே பாலின் சுவைப் பார்த்து..
ஒரே அன்பைச் சொந்தம்
கொண்டு..
ஒரே தட்டில் பிசைந்த
சோறு உருண்டையின்
ருசி பார்த்து…
ஒரே கட்டிலில்
தூங்கியெழுந்து..
பெரிய துண்டுக்காக
சண்டைப் போட்டு..
மீண்டும் சமாதானமாகி..
நானின்றி உன்னால்
முடியாமல் போக..
நீயின்றி என்னால்
முடியாமல் போக..
படிக்கும் மேசையின்
நடுவில் கோடு போட்டு..
இன்னும் இருக்கிறது
அந்த கோடு…
ஒரே இரத்தத்தின்
வாசனையில்
மனம் நிறைந்த… அடுத்த ஜென்மத்தில் இந்த
சகோதர பிணைப்பை எனக்கு மீண்டும் கொடுங்கள் இறைவனே 💕❤️💕




